உதவியாளரை அழைத்து ஷூ எடுக்க சொன்ன மாவட்ட ஆட்சியர் : அதிர்ச்சி சம்பவம் … சர்ச்சை வீடியோ…!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 12:45 pm

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது கோவில் வாசலில் தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை எடுத்துச் செல்லுமாறு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18ஆம் தேதி சாகை வார்த்தை நிகழ்ச்சியுடன் தொடங்கி அடுத்த மாதம் இரண்டாம் தேதி தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அதற்க்கு அடுத்த நாள் திருத்தேர் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதனையெட்டி திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கோவிலுக்கு வருகை தந்தார்.

அப்பொழுது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

அதனை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச் சென்றார். இந்த சம்பவதை பார்த்த ஆய்வுக்காக காத்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் கோவை மாநகராட்சியின் ஆணையராக பணிபுரிந்து வந்த அவர் கனியாமூர் கலவரத்திற்குப் பிறகு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 442

    0

    1