கரும்பு காட்டையே கொள்ளையடித்த திமுக கவுன்சிலர்.. மோட்டார் பம்புகளையும் விட்டுவைக்காத அவலம் : கம்யூனிஸ்ட் போராட்டத்தால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2022, 5:00 pm
நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இருந்த ஐந்து ஏக்கர் கரும்பை வெட்டி திருடி சென்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100 மேற்பட்டோர் மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிருத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சுத்தமலை கிராமத்தை சேர்ந்தவர் எலிசபெத் ராணி. இவருக்கு சொந்தமான சுத்தமலை கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தனர்.
ஐந்து ஏக்கர் கரும்பை மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்தக் கரும்பை ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் இரட்சகர் என்பவர் வெட்டி திருடி சென்று விட்டதாகவும் அங்கிருந்த மோட்டார் பம்பு செட்டு உள்ளிட்வை எடுத்துவிட்டு சென்றதாகவும் கூறி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுங்கட்சி பிரமுருக்கு எதிராக போராட்டம் நடத்தியது அம்மாவட்ட அரசியல் பிரமுகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.