அதிமுக வேட்பாளரை அடிக்கப் பாய்ந்த திமுக பிரமுகர் : வேட்புமனு பரிசீலனையின் போது மோதல்
Author: kavin kumar5 February 2022, 9:12 pm
திருப்பூர் : தாராபுரம் அருகே வேட்புமனு பரிசீலனை நடைபெறும் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளரை திமுக பிரமுகர் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நகராட்சியில் 30வார்டுகள், மற்றும் கொளத்துப்பாளையம் 15பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.அதனை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி அலுவலர் மேற்கொண்டனர். வேட்புமனு தாக்கல் செய்த நபர்களில் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றன.
இந்த நிலையில், திமுக, அதிமுக, பா.ஜ.க. , அமமுக உட்பட கொளத்துப்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது திடீரென திமுகவைச் சேர்ந்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயலாளர் மீசை துரைசாமி என்பவருக்கும், அதிமுக வேட்பாளர் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மீசை முருகேஷ் என்பவர் அதிமுகவை சேர்ந்த வேட்பாளரை தாக்க முயன்றுள்ளார்.
இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதையறிந்து வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திமுகவை சேர்ந்த நபர் வாய் தகராறில் ஈடுபட்டு அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளரை தாக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.