எருமை மாடு.. பேப்பர் எங்கே? பொது மேடையில் உதவியாளரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2025, 4:29 pm

தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது.

Dmk Minister mrk panneerselvam Talk Rudely to his assistant

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்க: ஆட்டு மந்தைகளுடன் பாஜகவினரை அடைத்து வைத்த போலீஸ்.. மதுரையில் சர்ச்சை!

இந்த நிலையில் விழாவில் வேளாண் துறை அமைச்சர் பேசத் தொடங்கும் போது தனது உதவியாளரை நோக்கி, பரசுராமன் எங்கே, எருமை மாடாடா நீ, பேப்பர் எங்கே என்று கேட்டதும், உதவியாளர் குறிப்பை கொண்டு வந்து கொடுத்தார்.

ஆனால் அந்த பேப்பரை கையில் அவரிடமே தூக்கிப்போட்டார். இந்த சம்பவம் விழாவில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?