அடுத்து சிக்கப் போகும் திமுக அமைச்சர் இவருதான் : பட்டியல் போட்டு புயலை கிளப்பிய அண்ணாமலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2023, 11:54 am

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சந்திராயன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. இனி உலக நாடுகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்திரயான் வெற்றி அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. பல நிறுவனங்கள் இதற்கு உதவி செய்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், CAG – திமுக, அதிமுக ஆட்சியில் கூட அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

ரயில்வே துறையில் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக செலவாகி இருப்பதை (Cost over) தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது அனைத்து மாநில அரசுக்கும் இதுபோன்று cost over இருக்கும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிப்போம் என தெரிவித்தார்.

தமிழக அரசு கூட விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்து இருக்கிறார்கள். மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் மாநில அரசு விளம்பரத்திற்காக செலவு செய்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

அமைச்சர்கள் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆ ர் ராமசந்திரன் தங்களுடைய பதவியை தவறாக பயன்படுத்துகின்றனர். கீழமை நீதிமன்றம் வேறு நபர்கள் சொல்லி இருக்கும் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர்.

நீதிமன்றத்திலும் திமுக தலையீடு இருக்கிறது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் இருக்கும் ஊழல் அரசு போல் வேறு எங்கும் இல்லை.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையை கலைக்க வேண்டும். மேலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பாக அமலாக்கதுறை மனு போட்டு இருக்கிறது. இன்னும் அடுத்து அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு வரும் என தெரிவித்தவர், இது தொடர்பாக செய்திகளின் அடிப்படையில் தான் பேசுவதாக கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!