பொற்கிழி பெற வந்த திமுக பெண் நிர்வாகிகள் அவமதிப்பு.. தரையில் அமரவைத்து சமூகநீதியை காற்றில் பறக்க விட்ட அவலம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 12:46 pm

பொற்கிழி பெற வந்த திமுக பெண் நிர்வாகிகள் அவமதிப்பு.. தரையில் அமரவைத்து சமூகநீதியை காற்றில் பறக்க விட்ட அவலம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன் பட்டியில் கட்சிக்காக உழைத்த 1500 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 20 நிர்வாகிகளுக்கு மட்டும் மேடையில் பொற்கிழி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு விருது பெறுவதற்காக அழைத்து வரப்பட்ட திமுக மூத்த பெண் நிர்வாகிகள் விழா மேடையின் முன்பு நிகழ்ச்சி முடியும் வரை தரையில் அமர வைக்கப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்தனர். யாருக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் தரையில் அமரவைத்து மரியாதை செய்தது இதுதான் திராவிட மாடல் மரியாதையோ என்று உண்மையான கட்சிக்காரர்கள் மனதுக்குள் புலம்பிச்சென்றனர்.

மேலும் கூட்டம் முடிவதற்குள் கூட்டத்திற்கு வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த கரும்புகளை எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டினர். மேலும் திமுக கட்சி நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் குப்பை அள்ளும் வாகனங்களையும் இந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளனர்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?