காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையதளங்களில் வெளியிட்ட சென்னை மருத்துவரை தனது நண்பர்களுடன் சேர்ந்த காதலி பழி தீர்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் விகாஷ். இவர்,பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக சென்றார். கடந்த 9-ந் தேதி பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17வது கிராசில் உள்ள காதலி வீட்டில் கோமா நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காதலி மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், விகாசை கொலை செய்ததாக மைகோ லே-அவுட்டை சேர்ந்த பிரதிஷா, அவருடைய நண்பர்களான சுசீல், கவுதம் ஆகிய 3 பேரையும் பேகூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விகாசும், பிரதிஷாவும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதனிடையே, பிரதிஷாவின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் விகாஷ் வெளியிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரதிஷா தனது நண்பர்களான சுசீல், கவுதம், சூர்யா ஆகியோருடன் சேர்ந்து, விகாசை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக கடந்த 9-ந் தேதி விகாசை, தனது வீட்டுக்கு பிரதிஷா வரவழைத்த பிரதிஷா, நண்பர்கள் சேர்ந்து அடித்தும், வீடு சுத்தம் செய்யும் மாப் மூலமாகவும் அடித்து தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கைதான 3 பேரையும் விசாரணைக்கு பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தலைமறைவாக உள்ள சூர்யாவை பேகூர் போலீசார் தேடிவருகிறார்கள்.
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
This website uses cookies.