விபத்தில் காயமடைந்த நபருக்கு ஜல்லி கற்களுடன் சேர்த்து தையல் போட்ட மருத்துவர்கள் : அரசு மருத்துவமனையின் அலட்சியம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 செப்டம்பர் 2022, 9:15 மணி
புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபரின் கணுக்கால் பகுதிக்குள் சிறிய ஜல்லிக்கல்லை அகற்றாமல் தையல் போட்ட மருத்துவமனையின் அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெருங்குடி ஆவணத்தை சேர்ந்த மதிவாணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மாடு மீது மோதிய வேகத்தில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது விழுந்ததில் கணுக்காலில் அடிப்பட்டது.
இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தையல் போடப்பட்டது. எனினும் வலி அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
காலில் ஏற்பட்ட காயத்திற்கு போட்ட தையலில் ஜல்லி கற்கள் இருந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அலட்சியத்தால் கற்கள் இருப்பதை கூட கவனிக்காமல் மருத்துவர்கள் சிகிச்சையளித்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை மீது அதிருப்தியையும், அச்சத்தையும் கொண்டுள்ளனர்.
0
0