ஓட்டுநருக்கு திடீர் ரத்தக் கொதிப்பு.. நிலை தடுமாறி சாலையோர கடைக்குள் புகுந்த ஆட்டோ.. ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2024, 2:54 pm

ஓட்டுநருக்கு திடீர் ரத்தக் கொதிப்பு.. நிலை தடுமாறி சாலையோர கடைக்குள் புகுந்த ஆட்டோ.. ஷாக் சிசிடிவி காட்சி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பஜார் எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய பகுதியாகும்.

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் சாலையில் உள்ள இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்வீட் கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.அப்போது திருச்செந்தூரில் இருந்து ஆட்டோ ஒன்று வேகமாக வந்து கடையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

மேலும் படிக்க: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் மனைவிக்கு வந்த போன் கால்.. காத்திருந்த ஷாக் : சைபர் கிரைம் விசாரணை!

ஆட்டோ ஓட்டுனர் வாகனத்தை ஓட்டி வரும்பொழுது திடீரென அவருக்கு ரத்த கொதிப்பு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் வந்த வேகத்தில் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் கடையில் நின்று கொண்டிருந்த மூன்று பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் ஸ்வீட் கடையின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமறைந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதால் கடை உரிமையாளர் மற்றும் காயமடைந்தவர்கள் புகார் கொடுக்காததால் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு ஏதும் செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடை முன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்து ஆட்டோ மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ