தாறுமாறாக வந்த கார் : பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டர் அழுத்திய ஓட்டுநர்.. தூக்கி வீசிய பாதசாரி.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 6:15 pm

தாறுமாறாக வந்த கார் : பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டர் அழுத்திய ஓட்டுநர்.. தூக்கி வீசிய பாதசாரி.. ஷாக் வீடியோ!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று L Board கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அதிவேகமாக வந்து சாலையோரம் நடந்து வந்த பாதசாரியை அடித்துத் தூக்கி வீசியது.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் மோதி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றது. பட்டப்பகலில் சென்னையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சாலையில் நடந்து சென்ற பழனி என்ற நபர், தன்னை நோக்கி கார் வருவதை பார்த்து சுதாரிப்பதற்குள், அதே நொடியில் காரில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்றதாக விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!