தீ காயங்களோடு நடுரோட்டில் தெறித்தோடிய ஓட்டுநர் : லாரியில் உள்ள டீசல் டேங்க் வெடித்து விபத்து.. மற்றொரு லாரிக்கும் தீ பரவியதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2022, 2:19 pm
திருச்சி துறையூர் பகுதியில் இருந்து பூச்சி மருந்து ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே பழுதானது.
இதையடுத்து பழுதை சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென டீசல் டேங்க் வெடித்து லாரி தீப்பற்றி எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர், கிளீனர் தீக்காயம் அடைந்தனர்.

மேலும் அந்த லாரியை ஒட்டி ஓரமாக நிறுத்தி வைத்திருந்த மற்றொரு லாரியும் தீ பற்றி எரிந்தது. உடனடியாக விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் சென்று தீ அணைத்து வருகின்றனர்.
இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது புகைமண்டலம் நீண்ட தூரத்துக்கு தெரிந்தது. மேலும் லாரியில் இருந்து ஓட்டுநர் தீக்கிரையோடு வெளியேறிய காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.