பழனி மலைக்கு பாறை மீது ஏறி சென்ற போதை ஆசாமி : முருகனை காண மதுபாட்டிலுடன் வந்த குடிமகனை எச்சரித்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 2:13 pm

பழனி மலைக்கோவில் பாறையில் ஏறி மேலே சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக படிப்பாதை, மின் இழுவை ரயில் ,ரோப்கார் ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரோப்கார் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ரோப்கார் வரிசையில் செல்வது போல் பாசாங்கு செய்து அருகில் இருந்த பாறைகளின் வழியே ஏறி வேகமாக ஆபத்தான முறையில் மலைமீது ஏறினார்.

இதுகுறித்து அங்கு இருந்த பக்தர்கள் கோவில் பாதுகாவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செக்யூரிட்டிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் போதை ஆசாமியை விரட்டிப்பிடித்து கீழே அழைத்து வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் போலீசார் போதை ஆசாமியிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் மதுபான பாட்டில் இருந்ததும், குடிபோதையில் மலைக்கோவிலுக்கு மேலே சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 558

    0

    0