நான் சொல்ற இடத்துக்கு பஸ்ஸ நேரா விடு : அரசு பேருந்தில் ஏறி போதை பெண்மணி அடாவடி.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 4:17 pm

திருப்பூரிலிருந்து செங்கப்பள்ளி வரை செல்லும் அரசுப்பேரூந்து (வழித்தட எண் 8) நேற்று மாலை சுமார் 4 மணிக்கு திருப்பூர் பஸ் நிலையத்திலிருந்து செங்கப்பள்ளி நோக்கி புறப்பட்டது.

அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் ஏறி சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்தபடி தள்ளாடிக்கொண்டு இருந்தார்.

இதனைக்கண்ட சக பெண் பயணிகள் தனக்கு எதுக்கு வம்பு என நினைத்து ஒதுங்கிக்கொண்டனர். பின்னர் அந்த போதைப்பெண் தனி சீட்டில் ஒய்யாரமாக அமர்ந்தபடி பயணித்தார்.

கண்டக்டர் அந்தபெண்ணுக்கு இலவச பயணச்சீட்டை கொடுப்பதற்காக எங்கு செல்கிறாய் என அந்த பெண்ணிடம் கேட்டபோது நான் ஈரோடு செல்லவேண்டும் எனக்கூறியுள்ளார்.

அதற்கு கண்டக்டர் இந்தவண்டி ஈரோடு எல்லாம் போகாது என கூறியுள்ளார். அதற்கு பரவாயில்லை எனக்கூறிக்கொண்டு இலவச பயணத்திற்கான டிக்கெட்டை வாங்கிக்கொண்ட அந்த பெண் பெரியபாளையம் வந்தவுடன் பஸ்ஸைவிட்டு இறங்காமல் அடம்பிடித்தபடி கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்தபெண் போதையில் உளரியபடி ஈரோட்டுக்கு பஸ்ஸை விடுங்கள் நான் அங்கு இறங்கி கொள்கிறேன் என கூறியபடி பஸ்ஸைவிட்டு இறங்காமல் அடம்பிடித்தபடி பஸ்ஸில் அமர்ந்திருந்தார்.

இதனால் பஸ்ஸை அங்கிருந்து கிளப்ப முடியாமல் போக்குவரத்துகழக உழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதனை பார்த்துக்கொண்டிருந்த சர்கார் பெரியபாளையம் பொதுமக்கள் பஸ்ஸில் ஏறி நைசாக பேசி அந்த போதைப்பெண்ணை பஸ்ஸைவிட்டு இறக்கி விட முயற்சித்து வேறு பஸ் வைத்து ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் எனக்கூறி அந்தபோதை பெண்ணிடம் மன்றாடியும் இறங்க மறுத்து போதையின் உச்சத்தில் நான் ஈரோடுதான் போகவேண்டும் என அடம் பிடித்தார்.

இதனையடுத்து போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பினால் உனக்குத்தான் பிரச்சனை என அங்கிருந்த பொதுமக்கள் கூறியதற்கு என்னை போலீஸ் எல்லாம் பாத்துட்டாஙக என போதையில் கத்தி விட்டு பஸ்ஸைவிட்டு இறங்க மறுத்தார்.

இதனை அடுத்து சர்கார் பெரிய பாளையத்திலிருந்து பஸ்ஸை கிளப்பிய ஓட்டுனர் திருப்பூர் நோக்கி சென்றார். போதை பெண்ணின் இந்த செயல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.

இச்சம்பத்தை அங்கிருந்த ஒரு இளைஞர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 688

    0

    0