ஆம்பளையா இருந்தா டாஸ்மாக்க மூட சொல்லுங்கடா : போலீசாரை அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய போதை இளைஞர்.. க்ளைமேக்சில் நடந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 9:02 pm

திருவாரூர் : காவல்துறையினரிடம் கெத்து காட்டி மொத்து வாங்கிய கத்தியுடன் வந்த போதை இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது..

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலை ரவுண்டானா என்பது இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என்று பல வாகனங்களும் ஆயிரக்கணக்கான மக்களும் தினந்தோறும்ம் கடந்து செல்லும் ஒரு பகுதியாகும்.

இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் திருவாரூர் நகர காவல் துறையினர் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த இரு இளைஞர்களை காவல்துறையினர் நிறுத்தினர். அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த போதை இளைஞர் ஒருவர் எடுத்த எடுப்பிலேயே காவல்துறையினரை தரக்குறைவாக பேச ஆரம்பித்தார்.

ஒரு ஆம்பளைக்கு எவனும் பிறந்திருந்தால் ஒயின்ஷாப்பை மூட சொல்லுங்கய்யா முடியாது ஏன்னா அது கவர்மெண்ட் கடை என்று தகாத வார்த்தைகளை சேர்த்து காவல்துறையினரை வசை பாடத் தொடங்கினான்.

தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னை கழுத்தை அறுக்குமாறும் நானும் தமிழன் தான் டா முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து பாருங்கள் என்று தகாத வார்த்தைகளை சேர்த்து ஒருமையில் காவல்துறையினரை தொடர்ந்து வசைபாடத் தொடங்கினான்.

அந்த பகுதிக்கு எதிரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அங்கு வந்திருந்த குடிமகன்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இதனை வேடிக்கை மட்டுமே பார்த்தனர். காவல்துறையினரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

காவலரில் ஒருவர் பிபி மாத்திரை போடும் அளவிற்கு உச்ச ஸ்தாபியில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் காவல்துறையினரை அந்த போதை இளைஞன் வறுத்தெடுத்த தொடங்கினான். மேலும் நான் எல்லா ஜெயிலையும் பார்த்துட்டு வந்தவன் தான் டா முடிஞ்சா என்ன கழுத்தறுத்திட்டு போங்கடா, எங்க பாப்பா மேல சத்தியமா சொல்றேன் எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேன் என்ன அறுத்துவிட்டு போங்கடா ஆம்பளையா இருந்தா அறுங்கடா, இங்கே எவனும் உத்தமன் இல்லடா  என ஏக வசனத்தில் காது கூசுகின்ற அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் பேசிக்கொண்டே அங்கிருந்த பேரி கார்டை மூன்று முறை எட்டி உதைத்தான்.

இதனையடுத்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து கூடுதல் போலீசாரை வரவழைத்து அவனைப் பிடிக்க முயன்ற போதும் அவர்கள் கைகளை தட்டி விட்டு லத்தியை பிடுங்கி முடிந்தால் என்னை அறுத்துவிட்டு போங்கடா என்று கொந்தளித்தான்.

வேறு வழியின்றி காவல்துறையினர் அவனை அடிக்க நேர்ந்தது. அப்போதும் கூட அடிப்பது பெரிய விஷயம் இல்லடா முடிந்தால் என்னை அறுத்து பாருங்கடா என்று திட்ட ஆரம்பித்தான். இதனையடுத்து அவனை அழைத்துச் சென்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது அருந்தியதற்கான சான்று பெற்ற பின்பு அவர்களை பற்றி  விசாரித்ததில் ரகளையில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சர்க்கை கரை பகுதியை சேர்ந்த முருகன் மகன் 20 வயதான மாதேஷ் என்பதும் அவனுடன் வந்தவன் 27 வயதான பாண்டி என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து மாதேஷின் உறவினர்களை அழைத்து எச்சரித்து அவர்களிடம் அவனை ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால் வழக்கு பதிவு செய்யாமல் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளதாக கூறினர். இருப்பினும் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மது அருந்துவதற்கு பணம் எப்படி கிடைத்தது, கத்தி எங்கிருந்து வந்தது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழதான் செய்கின்றன.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!