வாயால் சிக்கிய ஓட்டுநர் கைது : வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வந்த நபர் ரகளை.. 4 பிரிவுகளில் வழக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan2 July 2022, 7:09 pm
கோவை : நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ஓட்டுநரான இவர் தன் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு ஆஜராக நேற்று கோவை கோர்ட் வளாகத்துக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முன்பு சத்தம் போட்டு ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார்.
இதனைப்பார்த்த கோர்ட் ஊழியர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் குடிபோதையில் சத்தமிட்டு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு கோர்ட்டில் நடைபெறும் பணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற மாண்புகளை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பொது அமைதியை சீர்குலைத்தல், நீதிமன்ற அவமதிப்பு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0