முதியவர்கள் மீது விழுந்த மின்கம்பம் : கோவில் வாசலில் படுத்துறங்கிய போது பரிதாபம்… சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 2:27 pm

விழுப்புரம் : பயன்பாடு இல்லாமல் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் கோவில் வாசலில் படுத்திருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு முதியவர் படுகாயமடைந்தார்.

விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோடு LIC அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுத்து விட்டு படுத்திருந்த இரண்டு முதியவர்களான விழுப்புரம் காலேஜ் ரோடு பகுதியை செர்ந்த கணேசன் (வயது 52), கடலூர் ஓ.டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(வயது 70) ஆகியோர் மீது அருகில் இருந்த, மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் கணேசன் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இரண்டு கால் முறிவு ஏற்பட்டு காயமடைந்த ராமலிங்கம் என்ற முதியவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியாம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 619

    0

    0