வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை.. விசாரணையில் சிக்கிய நபர் : அதிர்ச்சியில் வனத்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
19 மே 2024, 4:34 மணி
Ele
Quick Share

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை.. விசாரணையில் சிக்கிய நபர் : அதிர்ச்சியில் வனத்துறை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி தாளவாடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வனப்பகுதியின் உள்ளே தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதனைக் கண்ட வனத்துறையினர் தாளவாடி வனச்சரகர் சிவகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் சிவகுமார் யானையின் உடலை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் யானையை வேட்டையாடி தந்தத்தை வெட்டிச் சென்ற கர்நாடக மாநிலம் எத்தேகவுடன் தொட்டியை சேர்ந்த பொம்மன் என்பவரை தாளவாடி வனத்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்த யானைத்தந்தத்தை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: கரூரின் மருமகன் ஆனார் கொரிய நாட்டு இளைஞர்.. தேசம் விட்டு தேசம் தாண்டி காதல் ; திருமணத்தில் இணைந்த பந்தம்!

மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த சில குற்றவாளிகளையும் தாளவாடி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

  • விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!
  • Views: - 382

    0

    0