ஊருக்குள் புகுந்து தெருநாயை ஆக்ரோஷத்துடன் துரத்திய ஒற்றை காட்டு யானை : வீட்டுக்குள் ஓடி ஒளிந்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 11:49 am

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் ஒற்றை ஆண் காட்டுயானை கிராமத்தினுள் நுழைந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதை பார்த்து மக்கள் அச்சமடைந்தனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் தற்போது கோடையின் வெப்பம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி துவங்க ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக வன உயிரினங்களான காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு தற்போதே வெளியேறி வருகின்றன. அந்த வகையில் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் நேற்று இரவு 9மணி அளவில் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்தது அங்குள்ள கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற யானையை பார்த்த தெருநாய் குரைத்த நிலையில் காட்டுயானை அந்த நாயை மிகுந்த ஆக்ரோசமாக துரத்தியது.

இதனை கண்ட மக்கள் வீட்டினுள் சென்று விட அந்த யானை அங்கிருந்து நகர்ந்து கல்லார் வனப்பகுதிக்குள் சென்றது. இரவு 9 மணிக்கு காட்டு யானை சாலை நடந்து வந்ததை பார்த்து அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1237

    0

    0