பேருந்தை வழிமறித்த யானை.. திரும்பி சென்ற அரசு பேருந்து : ஓட்டுநரை அலற விட்ட பயணி!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2024, 3:59 pm
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது சுருளிபட்டியை அடுத்த சுருளியாரு மின் நிலையம் செல்லும் சாலைக்கு முன்பாக சாலையின் நடுவே யானை கூட்டமாக நின்று கொண்டிருந்ததால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு யானை செல்லும் வரை காத்திருந்தனர்.
யானை அந்தப் பகுதியை விட்டு நகர்ந்து செல்லாததால் மீண்டும் பேருந்தை சுருளிப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டனர் பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பயணிகளுடன் பேருந்தை சுருளியாரு மின் நிலையத்திற்குச் சென்றபோது யானை கூட்டம் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே உலா வந்ததால் மீண்டும் பேருந்தை சுருளிப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு யானை நடமாட்டத்தால் பேருந்தை இயக்க முடியாது எனக் கூறியதால் பேருந்தில் சென்ற பயணி ஒருவர் ஆத்திரம் அடைந்து சாலையில் சென்ற பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
யானை உலா வருவதாக கூறி பேருந்து இயக்கவில்லை என்றால் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எப்படி தங்கள் வீடுகளுக்கு செல்வது என பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது