குழந்தை பயப்படுதல்ல HORN அடிக்காத : குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்ற யானை.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 1:18 pm

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டியுடன் சாலை வழிமறித்து நின்ற யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானை ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

https://vimeo.com/729894353

பின்னர் சிறிது நேரம் சாலையில் குட்டியுடன் உலா வந்த யானை மெல்லமாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் சாலையில் வாகனங்கள் செல்ல தொடங்கின. சாலையை வழிமறித்து நின்ற யானையால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!