வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த தோல்வி அடைந்த வேட்பாளர்: நெகிழ்ந்து போன விழுப்புரம் நகராட்சி வாக்காளர்கள்..!!

Author: Rajesh
2 March 2022, 8:18 pm

விழுப்புரம்: நடந்து முடிந்து உள்ளாட்சி தேர்தலில் தோற்றுப்போன வேட்பாளர் ஒருவர் மக்களுக்கு காலில் விழுந்து நன்றி தெரிவித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பேண்ட் மேளங்கள் இசைக்க வாக்களித்த பொதுமக்களுக்கு வீதி வீதியாக வந்து நன்றி தெரிவிப்பது வழக்கம். ஆனால் விழுப்புரத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் நகராட்சி 41வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக கிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார்.

f

இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாந்தா ராஜ் என்பவரிடம் வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இருப்பினும் தனக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் நகர், அன்னை தெரேசா நகர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பெரியவர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்து ஆசி பெற்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி