ஏலச்சீட்டு நடத்தி ஊரையே ஏமாற்றிய குடும்பம் : காவல் நிலையத்தில் சரணடைந்த குடும்ப தலைவி…

Author: kavin kumar
27 January 2022, 7:50 pm

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் சரணடைந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சோழவரம் போலீசார் புழல்சிறையில் அடைத்தனர்.

திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம்
UK சிட்பண்டு (உமேஷ் குமரன் என்பவரின் பெயரில் அவரது தாய் பஞ்சவர்ணம்செல்வி குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 9 பேர் மாதாந்திர ஏலச் சீட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிவந்த நிலையில், சுமார் நான்கு கோடி ரூபாய் பணத்தை கட்டிய பொதுமக்களுக்கு, அதனை திருப்பி தராமல் மகனுக்கு திருமணம், கணவருக்கு ஆப்ரேஷன் என ஏமாற்றி மோசடி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை அம்பத்தூரில் உள்ள மாநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7 ஆம் தேதி புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் செல்வி சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சோழவரம் போலீசாரின் பாதுகாப்புடன் அவரை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்து தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரை கைது செய்து பணத்தை தங்களுக்கு மீட்டு தரவேண்டும் என போலிசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ஏலச்சீட்டு பணம் வசூலித்த நாகபாண்டி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பஞ்சவர்ணம் செல்வி சரணடைந்துள்ளார். மீதம் உள்ள 8 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தங்களுக்கு பணம் கிடைக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 3338

    0

    0