பிரபல ரிசார்ட்டுக்கு கோடை விடுமுறையை கழிக்க சென்ற குடும்பம் : பெற்றோர் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடுமை.!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 6:21 pm

திருப்பூர் : பிரபல ரிசார்ட்டுக்கு கோடை விடுமுறைக் கசென்ற போது 15 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டப்பட்டுள்ளது இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்த பாஸ்கர் (வயது 52), ஸ்டெல்லா (வயது 38) தம்பதி கோடை விடுமுறையை கழிக்க தனது மகன்கள் ஸியாம் ராபின்சன் (வயது 15), ஐசக் (வயது 12) ஆகியோருடன் அருகில் வசிக்கும் சில குடும்பத்துடன் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, சர்கார் பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஜீ ரிசார்ட் பொழுது போக்கு தீம் பார்க்கிற்கு இன்று காலை சுமார் 11 மணியளவில் சென்றுள்ளனர்.

அங்கு அவரது மகன் ஸியாம் ராபின்சன்(15) மற்றும் சிலர் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஸியாம் ராபின்சன் எதிர்பாராத விதமான நீரில் மூழ்கி உயிருக்கு போராடியதாக தெரிகிறது.

உடனடியாக நீரில் மூழ்கிய சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து சிறுவனின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்த ஊத்துக்குளி போலீசார் ரிசார்ட்டில் நிர்வாக குறை காரணமா என வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1261

    0

    0