ரஜினியிடம் தனுஷுக்கு இருந்த அந்த உரிமையை பறித்த பிரபல நடிகர்.. இப்படி ஆகிடுச்சே..!

Author: Rajesh
21 May 2022, 12:47 pm

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாகவே படத் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது போல தெரிகிறது. பழைய பட தலைப்புக்கள் வாங்க பல இயக்கனர்கள் போட்டி போடுகின்றனர்.

அப்படி பழைய பட தலைப்புகளை வைப்பதிலும் சிக்கல்கள் நிலவி வருகிறது. சிலர் அதனை தர மறுத்துவிடுவர்கள். இதனால், சிலர் அந்த படத்திற்கு ஏற்ற வேறு பெயர்களை தங்களது படத்திற்கு வைத்துக்கொள்வார்கள்.

பெரிய ஹீரோ பழைய படம் என்றால் அந்த ஹீரோவிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் ரஜினி பட தலைப்புகளை யாரும் எடுக்க மாட்டார்கள். அது எப்படியும் பெரிய ஹிட் பட தலைப்பாக இருக்கும். அதனால் அந்த படத்தின் பெயர் கெட்டுவிட கூடாது என மறுப்பதற்கும் வாய்ப்புள்ளது என கேட்க தயங்குவார்கள்.
ஆனால், நடிகர் தனுஷ், ரஜினிக்கு மருமகனாக மாறிய பிறகு அந்த விஷயம் எளிதில் சாத்தியமானது. முதன் முதலாக பொல்லாதவன் என ரஜினி சூப்பர் ஹிட் பட தலைப்பை எடுத்துக்கொண்டார். அந்த படம் தனுஷுக்கு திருப்பு முனை திரைப்படமாக கூட அமைந்தது. தொடர்ந்து, படிக்காதவன். மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களின் தலைப்புகளை தனுஷ் எடுத்துக்கொண்டார்.

இதனிடையே, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘மாவீரன்’ படத்தின் டைட்டில், ‘எஸ்.கே.21’படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்’எஸ்.கே.21’படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாவீரன் என்ற டைட்டிலை படக்குழு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ரஜினி பட தலைப்பை உபயோகப்படுத்தும் முழு உரிமை தனுஷ்க்கு இருந்து வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ரஜினி படத்தின் தலைப்பை வைத்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 624

    0

    0