பிரபல ஒப்பந்தாரர் அசந்த நேரம்.. காரில் இருந்த ரூ.85 லட்சம்.. பணத்துடன் கார் ஓட்டுநர் தலைமறைவு : நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 9:28 pm

பிரபல ஒப்பந்தாரர் அசந்த நேரம்.. காரில் இருந்த ரூ.85 லட்சம்.. பணத்துடன் கார் ஓட்டுநர் தலைமறைவு : நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரபல ஒப்பந்ததாரர் ஹைவேஸ் பாண்டியன் என்ற பாண்டிச்செல்வன். நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் எடுத்து பணிகளைச் செய்து வருகிறார். இவரது அலுவலகம் புதுக்கோட்டை பெரியார் நகரில் அமைந்துள்ளது.

இவரிடம் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் பூங்குடியைச் சேர்ந்த ராமன் (25). இந்தநிலையில் திருவண்ணாமலையில் பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்காக புதுக்கோட்டை அலுவலகத்தில் இருந்து 82 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அலுவலக மேலாளர் சதீஷ்குமார், மற்றும் உதவியாளர் கார்த்திக் ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.

திருச்சி நெடுஞ்சாலையில் கட்டியவயலில் உள்ள வசந்தம் பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போட காரை நிறுத்தியுள்ளனர். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக சதீஷ்குமார் மற்றும் கார்த்திக் காரில் இருந்து இறங்கி சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது கார் மட்டுமே அங்கிருந்தது.

காரில் இருந்த பணத்தையும் காணவில்லை ஓட்டுநரையும் காணவில்லை. ஓட்டுநர் இராமன் 82 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து மேலாளர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த புத்தாம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மற்றும் பூங்குடி பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, இந்த கொள்ளைச் சம்பவத்தில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதை தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருடிய பணத்தை அதே பகுதியில் புதர் செடிகளில் சாக்கு மூட்டையில் வைத்து மணலில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதை எடுத்து பார்த்தபோது அதில் 75 லட்ச ரூபாய் மட்டுமே இருந்தது. மீதப் பணத்துடன் தப்பி சென்றுள்ள ஓட்டுநர் இராமனை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 451

    0

    0