தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற தூத்துக்குடி பிரபல ரவுடி,இவர் கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியில் தாயாருடன் வசித்து வருகிறார்
இவர் மீது இரட்டை கொலை வழக்கு 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் போலீசார் இவரை தேடி வரும் நிலையில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்,இன்று சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரூர் பகுதியில் பிரபல ரவுடி தூத்துக்குடி செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆதம்அலி தலைமையில் போலீசார் அங்கு சென்று பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது ரவுடி தூத்துக்குடி செல்வம் காவல் உதவி ஆய்வாளர் லீபி பால்ராஜை அறிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீசார் பாதுகாப்பு கருதி சுசீந்திரம் ஆய்வாளர் ஆதம் அலி தனது துப்பாக்கியால் ரவுடி செல்வத்தின் முழங்காலில் துப்பாக்கி சூடு நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து தப்ப முடியாமல் துடிதுடித்த ரவுடி தூத்துக்குடி செல்வத்தை போலீசார் பிடித்து முதல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு குண்டுகள் அகற்றப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ICU ல் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
இதனால் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.