திருந்த முடிவு செய்த பிரபல ரவுடி… நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 3:59 pm

சிவகங்கை மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (32) என்பவர் மீது சிப்காட் , திருப்பாச்சேத்தி இளையான்குடி , பூவந்தி, மற்றும் சிவகங்கை ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் ரவுடியான அழகுபாண்டி குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாகி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இதனிடையே திருப்பாச்சேத்தி காவல் நிலைய வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக மதுரைக்கு வந்துள்ளார்.

இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் அழகுபாண்டியின் மனைவி வீட்டில் அழகுபாண்டி தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்த 5பேர் கொண்ட கும்பலானது அழகுபாண்டியை சரமாரியாக அரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சராமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலயே அழகுபாண்டி உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒத்தக்கடை காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் கொலை சம்பவம்தொடர்பாக மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 950

    0

    0