நயன்தாராவை விரட்டிய ரசிகர்கள்… ரயில் நிலையத்தில் பரபரப்பு : போலீசார் வைத்த செக்!!
Author: Udayachandran RadhaKrishnan6 April 2023, 9:48 am
தமிழ் திரைப்பட நடிகை லேடிஸ் சூப்பர் ஸ்டார் எனப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலுக்குச் செல்ல விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
பின்பு அங்கிருந்து கார் மூலம் கும்பகோணம் வழுத்தூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தேஜஸ் ரயில் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தனர்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை காண்பதற்காக ரசிகர்கள் மற்றும் ரயில் பயணிகள் முண்டியடித்து வந்தனர்.
அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதுடன் அடாவடியில் ஈடுபட்டதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து ரசிகர்களை சற்றும் கூட மதிக்காமல், கையை கூட அசைக்காமல் நயன்தாரா அங்கிருந்து புறப்பட்டு சென்றது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
தொடர்ந்து போலீசார் மற்றும் பவுன்சர்கள் பாதுகாப்புடன் நயன்தாரா ரயில் ஏறி சென்னை புறப்பட்டு சென்றார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் வருகையால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இந்நிலையில் நயன்தாராவை காண பிளாட்பார்ம் டிக்கெட் கூட எடுக்காமல் திரண்ட ரசிகர்கள் அவர் ரயிலில் சென்ற பின்னர் வெளியே வந்த போது டிக்கட் பரிசோதகர்கள் அவர்களிடம் பிளாட்பார்ம் டிக்கெட் கேட்டு நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பதாக கூறியதால் அவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தனர்.