தின்னரை உடல் மீது ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 11:34 am

தின்னரை உடல் மீது ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்த விடாமல் தடுத்து நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி நாச்சிமுத்து என்பவர் எரிபொருளை (தின்னர்) ஊற்றி தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 45) இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 54 சென்ட் விவசாய நிலம் உள்ளது தற்போது நெல் சாகுபடி செய்ய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அவரது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை வழித்தடமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வழித்தடத்தை பயன்படுத்தக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறி விவசாயத்திற்கு சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது

இதுகுறித்து நாச்சிமுத்து சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்களுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த நாச்சிமுத்து எரிபொருளை (தின்னர்) தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றியதோடு அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர் விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!