மிளகாய் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயி… மோப்பம் பிடித்த போலீசார்…!!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2023, 10:30 am
தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களின் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் மது வேட்டையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள உள்ள சிடுவம்பட்டி, பேகியம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30).
இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வருவதாக ஏரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார், சரவணனின் விவசாய நிலத்தில் சோதனை செய்தனர்.
அப்போது 15 க்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் அவரது மிளகாய் தோட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சரவணனை கைது செய்த போலீசார், அவர் பயிரிட்டிருந்த ஒன்றரை கிலோ எடையுடைய கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல்செய்தனர்