எங்களுக்கும் நேரம் ஒதுக்குங்க… குறையை சொல்ல நேரம் ஒதுக்காத ஆட்சியர் : விவசாயி குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2022, 5:19 pm

விழுப்புரம் : ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியர் மோகன் முன்பு பேச அனுமதிக்ககோரி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சற்று காலதாமதமாக வந்த போது முன்னதாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏழுமலை என்பவர் திருவாமத்தூர் பகுதியிலுள்ள வாய்க்கால் வழியை ஆக்கிரமித்து சிலர் வைத்துள்ளதால் அதனை மீட்டு தரக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனுவை மாலையாக அணிவித்து வந்து கூட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் மீண்டும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது ஒரு சில விவசாயிகள் திடீரென கூட்டத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பேச அனுமதிப்பதாக கூறி விவசாயிகள் ஆட்சியர் மோகன் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் விவசாயிகள் தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இந்த விவசாய கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு நெல் வாழை விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று சுட்டி காண்பித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 493

    1

    0