39 மணி நேரமாக உண்ணாமல் உறங்காமல் மரக்கிளையில் தவித்த விவசாயி : பத்திரமாக மீட்ட அரசியல் கட்சி.. நெகிழ வைத்த காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 6:59 pm

39 மணி நேரமாக உண்ணாமல் உறங்காமல் மரக்கிளையில் உயிருக்கு பயந்து தவித்த விவசாயி : கைக்கோர்த்து பத்திரமாக மீட்ட அரசியல் கட்சி!

கன்னியாகுமரி பத்தமடை அருகே கொழுமடை கிராமத்தில் தோட்டத்தை வாழ்விடமாக்கி 20க்கும் பேற்பட்ட ஆடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருபவர் செல்லையா வயது 72.

இவர், 17ம் தேதி அன்று இரவு திடீரென இரவு நேரத்தில் வெள்ள நீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தோட்டத்தினை சூழ்ந்தது.

இதையடுத்து தான் வளர்த்த ஆடுகள் கண்முன்னே வெள்ளத்தில் இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சியில் மரத்தின் மீது ஏறி அமர்ந்து தூக்கமின்றி உணவின்றியும் இரவும் பகலுமாக 39 மணிநேரம் தவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மகன் கொடுத்த தகவலின்படி பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி பெற்ற SDPI கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையில் 15 செயல்வீரர்களோடு 1 மணி நேர முயற்சிக்கு பின் 1 கிலோமீட்டர் பரப்பளவின் நீரில் நீந்திச்சென்று முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1095

    0

    0