மதுபோதையில் மகனுக்கு நேர்ந்த கதி.. தந்தை அதிரடி கைது : கோவையில் Shock!!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2024, 3:59 pm
மதுபோதையில் மகனுக்கு நேர்ந்த கதி.. தந்தை அதிரடி கைது : கோவையில் Shock!!
கோவை பேரூர் அருகே கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் 45. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாயன் மாலை ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். இரவு சுமார் 8.30 மணிக்கு மாயன் அவரது மனைவி முத்தம்மாள் இரண்டாவது மகன் முத்துக்குமார் ஆகியோர் வீட்டில் இருந்து உள்ளனர்.
அப்பொழுது மாயன் முட்டை வறுத்துக் கொண்டு இருக்கும் பொழுது மூத்த மகன் முகேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்து உடனே வீட்டில் வெளியே இருந்த செம்பை எடுத்து மாயனின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார்.
அப்பொழுது தந்தை மகன் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாயன் தனது மகனை தாக்கி உள்ளார். மனைவி முத்தம்மாள் இருவரையும் தடுத்து உள்ளார்.
மனைவி முத்தம்மாள் வெங்காயம் வெட்ட வைத்து இருந்த சிறிய கத்தியால் மாயன் தனது மகன் முகேஷ் இடது கழுத்தில் மற்றும் முதுகு, கால் பகுதியில் குத்தி உள்ளார். வலி தாங்க முடியாமல் மகன் கீழே விழுந்து துடித்து உள்ளார்.
பின்னர் இரண்டு சக்கர வாகனத்தில் அவரது தம்பி முத்துக்குமார் தனது நண்பர்களுடன் சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
மேலும் படிக்க: வாக்கு இல்லை என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் மை இருந்ததால் சர்ச்சை.. PEOPLE OF ANNAMALAI அமைப்புக்கு எதிர்ப்பு!
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் முகேஷ் உயிரிழந்தார். இதை அடுத்து கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.