புரோட்டா கேட்ட தந்தை.. ஆசையாக வாங்கி கொடுத்த மகன் : சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தந்தை.. விசாரணையில் பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2022, 7:20 pm
கலவையில் ஓட்டலில் மகன் தந்தைக்கு உணவு பார்சலை வாங்கி சென்று பரோட்டா மற்றும் குருமாவை உட்கொண்ட போது தந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையம் அருகே உள்ள நாகு என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது இந்த ஓட்டலில் காலை டிபன் முதல் இரவு தோசை, பரோட்டா, ஆகியவை விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று கலவை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்ற வாடிக்கையாளர் ஹோட்டலுக்கு வருகை தந்து தன்னுடைய தந்தைக்கு பரோட்டா பார்சல் வாங்கிக்கொண்டு அதற்கு தேவையான குருமாவை வாங்கி சென்றுள்ளார்.
அதனை தங்கராஜ் தனது தந்தை பார்சலை பிரித்து புரோட்டா மற்றும் குருமாவை சாப்பிட்டுள்ளார். அப்போது சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்து அதிக அளவில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளது.
பயந்து போன தங்கராஜ் தனது தந்தையை கலவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பிறகு அவர் சாப்பிட்ட குருமாவை ஆய்வு செய்த போது அதில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தகவல் அறிந்த கலவை வட்டாட்சியர் ஷமீம், துணை வட்டாட்சியர் சத்யா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற பல்வேறு இடங்களில் சுத்தகமாகவும் சுகாதாரம் இல்லாமல் அலட்சியமாக தரமற்ற உணவுகளை செய்து வருவது அனைத்து தனியார் ஓட்டல்களில் தொடர்கதையாக உள்ளது.
எனவே ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அடிக்கடி சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உணவு பிரியர்களின் கோரிக்கையாகவே உள்ளது.