தமிழி சினிமாவில், இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜி.எம்.குமார் கடந்த 1986 ஆம் ஆண்டு, பிரபு ஹீரோவாக நடித்த அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் ஜி.எம்.குமாருக்கு அடுத்த சில படங்களை இயக்கும் வாய்ப்பையும் பெற்று தந்தது. இருப்பினும் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை இவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இவரது வணிக மதிப்பு கணிசமாகக் குறைந்து. இவரது ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, பிட்பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கினார். ‘உருவம்’ படத்தை இயக்கியது மட்டும் இன்றி, தயாரிக்கவும் செய்தார். இப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை இவருக்கு ஏற்படுத்தியதால், பின்னாளில் திரைப்படங்கள் இயக்குவதில் இருந்தே விலகினார்.
இவர் முதன்முதலில் இயக்கிய அறுவடை நாள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை பல்லவி. உருவம் படத்தில் கூட பல்லவி நடித்திருப்பார். இவர்கள் காதலித்து திருமணம் செய்த கொண்டவர்கள்.
பின்னர் இயக்குனர் பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில், ஆர்யா – விஷால் நடிப்பில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் இவர் நடித்த ஹைனெஸ் என்ற கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இவரது நடிப்புக்கு சில விருதுகளும் கிடைத்தது. திரைப்படத்தை தொடர்ந்து, சில சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு, தமன்னா நடிப்பில்… வெளியான வெப் தொடரான ‘நவம்பர் ஸ்டோரி’ தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இவருக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், இவரது குடும்பத்தினர்.. இவரை உடனடியாக முகலிவாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இவரது மருத்துவமனை புகைப்படம் ஒன்று வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் தொடர்ந்து இவர் நன்கு உடல் நலம் தேறி வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.