சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் தான் கோபி. தொழிலதிபரான இவர் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நடிகர் விமல், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் ‘கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார். பட வெளியீட்டிற்கு முன்பே லாபத்துடன் தொகையை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார். இதனை நம்பி 5 கோடி ரூபாய் விமலிடம் கொடுத்தேன். அதற்காக ஒப்பந்தமும் போட்டுக்கொண்டோம்.
இதனையடுத்து ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி நல்ல லாபம் எடுத்த போதிலும், தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகிறார். பல மாதங்கள் கழித்து 1.30 கோடி கடனை திருப்பி செலுத்தி, மீத தொகையை 6 மாதத்திற்குள் தருவதாக விமல் தெரிவித்தார்.
பின்னர் பொய்யான காரணங்களை கூறி விருகம்பாக்கத்தில் என் மீது விமல் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து விமலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது 3 கோடி ரூபாய் தருவதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டார். ஆனால் இதுவரை பணம் தராமல் ஏமாற்றி வருவதால், இது குறித்து விமலிடம் கேட்கும் போது கொலை மிரட்டல் விடுக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களாக 5 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்கும்படி புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.