ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2025, 2:21 pm
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், வன்னியர் சங்கம் 1980ல் தொடங்கிய காலத்தில் வாரம் முழுவதும் மருத்துவ சேவையாற்றிய தான் சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.
இதையும் படியுங்க: பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!
இனிமே பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பினை தானே எடுத்து கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமனம் செய்துள்ளார்.
அன்புமணியை பதவி நீக்கம் செய்த காரணத் கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன் என பேசும் போது, பாஜகவுடன் கூட்டணியா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன், நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்து கூறுகிறேன் என தெரிவித்தார்.

ராமதாஸ் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியது அக்கட்சியினரிடையே அதிருப்தியை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பாமக பொதுக்குழு கூட்டத்தின் போது ஒரே மேடையில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
அப்போது பாமக இளைரணித் தலைவராக ராமதாஸ் தனது சகோதரி மகன் முகுந்தனை அறிவித்த போது, மேடையிலேயே எதிர்த்து பேசியிருந்தார் அன்புமணி,.
இந்த நிலையில் ராமதாஸ் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக முதல் குரலாக பாமக பொருளாளர் திலகபாமா பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் பாமகவின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த முடிவு சரியே, அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான்.. ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம். அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்.
நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், தனி நபர்களை விட தலைமை பெரியது, தலைமையை விட இயக்கம் பெரியது, இயக்கத்தை விட சமூகம் பெரியது . சமூக நலன் காக்கப்பட வேண்டுமென்றால் அது அன்புமணி தலைமையில் மட்டுமே, டாக்டர் அன்புமணி வழியில் நாம் என பதிவிட்டுள்ளார்.