மீன் பிடிக்க வலையை விரித்த மீனவர்கள்… சிக்கியது மீன் அல்ல… ராட்சத மலைப்பாம்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2023, 1:28 pm

மீன் பிடிக்க வலையை விரித்த மீனவர்கள்… சிக்கியது மீன் அல்ல… ராட்சத மலைப்பாம்பு!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பெரிய ஏரி குத்தகை விடப்பட்டு வளர்ப்பு மீன்கள் பிடித்து வியாபாரம் செய்து வந்த நிலையில் நேற்று இரவு மீன் பிடிப்பதற்காக ஏரியில் போடப்பட்ட வலயை காலையில் சென்று பார்த்தபோது மீன் பிடிக்கும் வலையில் 9 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு சிக்கிக் கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.

இதையடுத்து ராட்சத மலைப்பாம்பை காண அதிகளவில் கூடிய பொதுமக்கள் மேலும் பொது மக்களின் தகவலின் பெயரில் பகண்டை காவல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு வந்த பகண்டை காவல் துறையினர் சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் வலையில் சிக்கிக் கொண்டிருந்த 9 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பை பிடித்து பொதுமக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் நடைபெறாமல் தடுத்து சங்கராபுரம் வனத்துறையினரிடம் மலைப்பாம்பை ஒப்படைத்தனர்.

மேலும் வனத்துறையினர் மலைப்பாம்பை சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர் மேலும் இந்த நிகழ்வு வாணாபுரம் பகுதியில் பொதுமக்களிடையே சிறிது பரபரப்பு ஏற்படுத்தியது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…