ஆற்றில் ஏற்பட்ட காற்றாறு வெள்ளம்.. ஊருக்குள் செல்ல முடியாமல் தவித்த பழங்குடியின மக்கள் : கடவுள் போல வந்த இளைஞர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 10:23 am

ஆற்றில் ஏற்பட்ட காற்றாறு வெள்ளம்.. ஊருக்குள் செல்ல முடியாமல் தவித்த பழங்குடியின மக்கள் : கடவுள் போல வந்த இளைஞர்கள்!

ஆற்றில் வெள்ளம் வந்ததால் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த பழங்குடியின மக்கள் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்பு கிராமத்து இளைஞர்கள் கயிறு கட்டி ஆற்றைக் கடந்து அழைத்துச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்ட வெள்ளகவி ஊராட்சி ஊராட்சியில் சின்னூர், கடப்பாரை, பெரியூர் ஆகியமூன்று கிராமங்கள் உள்ளன இப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது.

இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது மருத்துவமோ படிப்போ தேவையானாலும் மற்றும் காய்கறி பொருட்கள் விற்பனை செய்வது என்றாலும் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மற்றும் போடி பகுதிக்கு தான் கால்நடையாக செல்ல வேண்டி உள்ளது.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டு இருந்தாலும் இவர்கள் கொடைக்கானலுக்கு செல்ல முடியாது. பெரியகுளம் தேனிக்கும் தான் செல்ல வேண்டி உள்ளது .

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே பகுதியை சேர்ந்த ராமன் தனது மகள் அம்பிகா மற்றும் குமரன். ரித்திக். தட்னேஷ் பேரக்குழந்தைகளுடன் ஊருக்கு செல்லும் கல்லாற்றை கடந்து செல்ல முற்பட்ட பொழுது திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் ஆற்றின் நடுவே 5 பேரும் சிக்கிக்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டவர்களை மலை கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து கயிறு மற்றும் மரத்தின் கொடிகளை கட்டி ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டு ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி