வீட்டு மொட்டை மாடியில் தவித்த கர்ப்பிணிகள் உட்பட 17 பேர் : ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்ட காட்சிகள் வைரல்!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2023, 10:01 pm
வீட்டு மொட்டை மாடியில் தவித்த கர்ப்பிணிகள் உட்பட 17 பேர் : ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்ட காட்சிகள் வைரல்!
கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் நாளையும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், இன்னும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப 2 நாட்கள் ஆகும் என்பதாலும் நாளை நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் பொது விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். சிலர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்ப்டடுள்ளனர்.
இந்த நிலையில் நெல்லையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வீட்டின் மொட்டை மாடியில் தவித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் கடற்படையின் மீட்டனர்.
வெள்ளத்தால் வீட்டின் மாடியில் தவித்த குடும்பம்
— UpdateNews360Tamil (@updatenewstamil) December 18, 2023
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!#trendingvideos #viralnews #Tenkasi #TNRains #HeavyRain #Nellai #NellaiRain #NellaiFloods #Tirunelveli #TuticorinRains #Thoothukudi #helicopter #rescue pic.twitter.com/cgcajOjXsG
2 கர்ப்பிணி உள்ளிட்ட 17 பேரை மீட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.