கோவையில் MyV3 Ads நிறுவனர் கைது…கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த போது கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 3:53 pm

கோவையில் MyV3 Ads நிறுவனர் கைது…கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த போது கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!

My V3 Ads நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை வெள்ளகிணறு பகுதியில் MyV3 Ads நிறுவனம் செயல்பட்டு வருகிறது. My V3 Ads நிறுவனம் போலியாக மக்களை ஏமாற்றி பண மோசடி ஈடுபட்டு வருவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அப்போது காவல் ஆணையர் மீட்டிங்கில் இருப்பதால் புகாரை எழுதி வாங்கி கொண்டு சக காவலர்கள் அவர்களை அடுத்த வாரம் வருமாறு வலியுறுத்தினர்.

ஆனால் காவல் ஆணையரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று சக்தி ஆனந்த் மற்றும் ஆதரவாளர்கள் காவல் ஆணையர் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினர் பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 350

    0

    0