தமிழகம்

மனைவியுடன் ஒரே கட்டிலில் இருந்த நண்பன்.. துவண்டு போன கணவன் : உயிரை பறித்த உல்லாசம்… கடைசியில் ட்விஸ்ட்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் அருகே குறிஞ்சிகங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகள் திலகவதி (வயது24).

இவருக்கும் ஊத்தங்கரை அடுத்த வண்ணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்கிற சக்திவேல் (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சக்திவேல் இட்டாச்சு ஆபரேட்டராக பணி செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 1வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வேலையின் காரணமாக சக்திவேல் டெல்லிக்கு சென்றார்.

இந்நிலையில் உதவிக்காக வந்த நண்பனிடம் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கணவர் சக்திவேலின் கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரான ஹரிஷ் (22) என்ற நபரை மனைவிக்கு வேண்டிய உதவிகளை செய்து தரும்படி அவ்வப்போது கூறியுள்ளார்.

இதற்காக ஹரிஷ் காலை, மாலை என இருவேளை
களில் சக்திவேலின் குழந்தைக்கு பால் வாங்கி தரவும் உதவியாக இருந்து வந்தார். இதற்காக பணத்தை சக்திவேல் அவரது நண்பர் ஹரிசுக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.

இதனால் திலகவதிக்கும், ஹரிசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.

இந்நிலையில் சக்திவேல் தனது மனைவி திலகவதியிடம் செல்போனில் பேச முயன்றபோது அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் மனைவிக்கு தெரியாமல் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ஹரிசும் திலகவதியும் ஒன்றாக வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சக்திவேல் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து தகவலைக் கூறி வரவழைத்து 3 மாதம் தங்கள் ஊரிலேயே இருக்கட்டும் அதன்பின்னர் திலகவதியை அழைத்து செல்வதாக கூறி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் தாயின் வீட்டிற்கு வந்த திலகவதி நேற்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவலறிந்த சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து மனைவியின் உடலை கைப்பற்றி சொந்த ஊரான ஊத்தங்கரை அருகே உள்ள வன்னாம்பள்ளி கிராமத்தில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்று ஏற்பாடுகளை செய்தார்.

இதற்கிடையே திலகவதி தூக்குபோட்டு கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: காந்தி சிலையை உடைத்த மர்மநபர்கள் : குமரியில் பரபரப்பு…. புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத காவல்துறை!!

அப்போது திலகவதியின் உடலை கிருஷ்ணகிரி செல்லும் வழியில் தொகரப்பள்ளி காப்புக்காடு அருகே செல்லும் பொழுது ஆம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்த 3பேர் உடலை தங்களுக்கு கொடுக்கும்படி கூறி தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை நேரடியாக போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் உடல் பிரதேச பரிசோதனைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கள்ளக்காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்காதலன் ஹரிசும், அதேபோன்று தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஷின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமணமாகி 3 வருடங்கள் ஆனநிலையில் திலகவதி தூக்குபோட்டு கொண்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. பாபு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலர்கள் இருவரும் ஒன்று சேர கணவன் இடையூறாக இருந்த நிலையில் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

5 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

6 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

6 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

7 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

7 hours ago

This website uses cookies.