தியேட்டரில் The G.O.A.T பட பேனர்களை அகற்றியதால் பரபரப்பு : கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan5 September 2024, 11:52 am
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கம் முன்பாக விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே திரைப்பட வெளியிட்டு விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்க நீதிமன்றம் காவல்துறை அனுமதி வாங்க தேவையில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றாலே போதும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான பிளக்ஸ் பேனர்களையும் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.