நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து பொருட்களை சூறையாடிய கும்பல்.. அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 8:39 am

மதுரை புதூர் அழகர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ராம திலகம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 30 வருடமாக ஒத்திக்கு குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் முத்துக்குமார் வீட்டின் உரிமையாளர் ராமதிலகம் என்பவர் சுபாஷ் என்பவருக்கு தனது வீட்டை முத்துக்குமாருக்கு தெரியாமல் கிரயம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுபாஷ் என்பவர் முத்துக்குமாரை உடனடியாக வீட்டை விட்டு காலி செய்யுமாறு பலமுறை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
புதூர் காவல் நிலைய போலீசார் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சுபாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் கடப்பாரை சம்பட்டி கத்தி அறிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முத்துக்குமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முத்துக்குமாரை மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல் பீரோ,வாஷிங் மெஷின்,கட்டில்,பிரிட்ஜ், சிலிண்டர் மற்றும் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள்,வெள்ளி பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாகியவற்றை திருடிச் சென்றும் முத்துக்குமாரின் வீட்டை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புதூர் போலீசார் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று நள்ளிரவில் இருவதுக்கும் மேற்பட்ட குண்டர்கள் முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்து வீட்டை அடித்து நொறுக்கி வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி கட்சியில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் முத்துக்குமாரின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளே இருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது இந்த சிசிடிவி கட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் முத்துக்குமார் இந்த சம்பவம் குறித்து புதூர் காவல் நிலையத்தில் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீடு புகுந்து 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் வீட்டை அடித்து நொறுக்கி பொருட்களை திருடி சென்ற சம்பவம் புதூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து வீட்டில் வசிக்கும் முத்துக்குமார் பேசும் போது, இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே புதூர் போலீசில் புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.நள்ளிரவில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது என்னை பயங்கர ஆயுதங்களை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்று விட்டனர். மேலும் வீட்டின் கதவு ஜன்னல் உள்ளிட்ட அவற்றை அடித்து நொறுக்கி வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை 40 ஆயிரம் ரொக்க பணம் மட்டும் வீட்டு உபயோகப் பொருட்களை திருடி சென்று விட்டனர். புதூர் காவல்துறையினரும் எதிர் தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  • 90s Favourite Actress Kanaka Recent News Goes Viral பரிதாப நிலையில் கனகா… காரணமே இவங்க தானா? போட்டுடைத்த பிரபலம்!
  • Views: - 440

    0

    0