பள்ளி மாணவனை கடத்தி ₹2 கோடி கேட்டு பெற்றோரை மிரட்டிய கும்பல் : 3 மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 4:28 pm

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் வசித்து வரும் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து படித்துவருகிறார்.

இன்று ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனை ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி என்பவரோடு மாணவனையும் கத்தியை காட்டி கடத்தி வைத்து கொண்டு மைதிலி ராஜலெட்சுமியிடம் போனில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தது.

அதில் 2 கோடி ரூபாய் பணத்தோடு வராவிட்டால் சிறுவனை கொலை செய்வதாக கூறியதோடு, இதனை காவல்துறையிடம் கூறினாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியாது எனவும் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து SS காலனி காவல் நிலையத்தில் தாயார் மைதிலி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிறுவனை கடத்தி மிரட்டிய கடத்தல் கும்பலை விரட்டிசென்றது.

காவல்துறையினர் தங்களை கண்டுபிடித்து பின்தொடர்வதை பார்த்த கடத்தல் கும்பல் 7ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிசென்றது.

இதனையடுத்து சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்து தப்பி சென்ற கடத்தல் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பள்ளி மாணவன் காணாமல் போனதாக கூறி மிரட்டல் விடுத்து கடத்திசென்ற நபர்களை 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட தனிப்படை காவல்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 290

    0

    0