நாங்க சொல்றத மட்டும் செய்… மசாஜ் சென்டரில் பெண்களிடம் ஆபாசமாக நடந்த கும்பல்.. அலறி ஓடிய ஊழியர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 5:43 pm

மசாஜ் சென்டரில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். இங்கு கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து இருக்கக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காகவும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம் .

இதேபோன்று சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நண்பர்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.. அப்போது கொடைக்கானலை சேர்ந்த ஒரு நபரிடம் மசாஜ் சென்டர் அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.

அவர்களின் அழைப்பின் பேரில் மசாஜ் சென்டருக்கு ஒருவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு இந்த நான்கு வாலிபர்களையும் அழைத்து சென்றுள்ளனர்.

மசாஜ் சென்டருக்குள் ஒருவர் சென்று மசாஜ் முடித்த பிறகு வெளியே வந்துள்ளார் . அப்போது பணம் கேட்டதற்கு என்னுடைய நண்பர்கள் மீதமுள்ள மூன்று பேர் உள்ளனர். அவர்களையும் தாம் அழைத்து வருவதாக கூறி ஒருவர் மீதமுள்ள மூன்று பேரையும் மசாஜ் சென்டருக்குள் அழைத்துச் சென்றுள்ளார் .

மசாஜ் முடிந்த பிறகு ஆபாசமாக நடக்க வேண்டும் என்று மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களை கேட்டதாக கூறப்படுகிறது .
அப்போது அவர்கள் இங்கு மசாஜ் மட்டும்தான் செய்யப்படும் என்று கூறிய நிலையில் மசாஜ் செய்யும் பெண்களுக்கும் இந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் நான்கு வாலிபர்களும் ஒருவர் தாம் போலீஸ் என்றும் ஒருவர் தாம் பத்திரிக்கையாளர் என்றும் மிரட்டி அவர்களை வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அச்சமடைந்த மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்கள் செய்வது அறியாது திகைத்த நிலையில் நீங்கள் மசாஜ்க்கு பதில் பாலியல் தொழில் செய்து வருவதாக வெளியில் கூறி உங்களை காவல்துறையில் புகார் செய்வோம் என்று மிரட்டிய நிலையில் மசாஜ் சென்டருக்குள் இருந்து வெளியே வர பெண்கள் முயற்சித்துள்ளனர்.

மேலும் படிக்க: நடுத்தெருவில் சுய இன்பம் : கடைசியில் நடந்த டுவிஸ்ட்.. வெளியான ஷாக் வீடியோ!

அப்போது இந்த கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் பெண்கள் வெளியே செல்வதையும் வீடியோவாக எடுத்து வந்த நிலையில் அவர்களை கையைப் பிடித்து இழுத்து வெளியே செல்ல விடாமல் துன்புறுத்திய காட்சிகளை அந்த வாலிபரின் ஒருவரே வீடியோவாக எடுத்துள்ளார் .

அப்போது அலறி அடித்து பெண்கள் அந்த விடுதியை விட்டு வெளியே செல்லும் பொழுது ஹோட்டலில் உள்ள கண்ணாடியையும் உடைத்து வாலிபர்கள் அந்த பெண்களை பரபரப்பான அண்ணாசாலையில் துரத்தி உள்ளனர்.

பெண்களின் வீடு வரையும் இவர்கள் விரட்டி சென்றிருப்பது மசாஜ் சென்டர் பெண் ஒருவர் கூறுகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது துரத்தி செல்லும் பொழுது அவர்களின் ஆடைகளையும் இந்த வாலிபர்கள் கிழித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பத்திரிக்கையாளர்கள் விரைந்தனர்.

அப்போது பெண்களை துரத்தி முடித்து மீண்டும் விடுதியை நோக்கி வந்த அந்த வாலிபர்கள் பத்திரிகையாளர்களையும் வீடியோ எடுத்தனர் தொடர்ந்து காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த சூர்யா மற்றும் பிரேம் அவரது நண்பர்களான ராணிப்பேட்டையை சேர்ந்த திவாகர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சாலமன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் பிடித்து அவர்களின் செல் ஃபோன்களை பறிமுதல் செய்து பார்க்கையில் பெண்கள் அறையை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்த வீடியோ இவர்கள் பின் தொடர்ந்து சென்ற வீடியோவை அவர்களே பதிவு செய்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் மசாஜ் சென்டர்களில் வைத்திருந்த அலைபேசிகளையும் எடுத்து வெளியே ஓடி வந்ததாக கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மசாஜ் சென்டருக்கு சென்று பெண்களை துன்புறுத்தி அவர்களை சாலையில் விரட்டி சென்ற சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spa

அவர்களிடமிருந்து கைபேசிகள் மற்றும் வாகனம் கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் கொடைக்கானலில் உள்ள மசாஜ் சென்டர்களை முழுமையாக காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் மசாஜ் சென்டரில் பெயரில் வேறு தொழில் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 379

    0

    0