இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2024, 4:49 pm
இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!
மதுரை கல் மேட்டை சேர்ந்தவர் ராமர் இவருடைய மகன் அருள் முருகன். வயது 28. இன்று காலை 12.45 மணிக்கு விளாங்குடி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது கூலிப்படையை சேர்ந்தவர் அருள்முருகனை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!
இது குறித்து மதுரை கூடல் புதூர் காவல் நிலையம் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மதுரையில் பட்டப்பகல் நடைபெற்றது இதனால் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டுள்ளது.