விருத்தாச்சலம் : பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து தாக்குதல் நடத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் தூக்கி வீசி சென்ற குற்றவாளிகை கைது செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி உறவினர்கள் பாமகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன் குப்பத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகளுக்கும் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு வரும் 10ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் விருத்தாச்சலம் அருகே கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்த அம்பலவாணன் மகன் ஸ்ரீதர், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை தூக்கி சென்று விருத்தாசலம் அருகே கார்மாங்குடி வெற்றாற்று அருகே டூ வீலரில் கடத்தி சென்றுள்ளார்,.
இருவருக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஸ்ரீதர் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு பையில் வைத்திருந்த சுத்தியால் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து கும்பல் சுத்தியல் போன்ற ஆயுதங்களால் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்மாங்குடி ஆற்றங்கரையில் தூக்கி வீசி சென்று விட்டனர்.
அருகில் வயலில் வேலை பார்த்த விவசாயிகள் பார்த்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உயர்சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இளம்பெண் சுயநினைவு இழந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறிஞ்சிப்பாடி அருகே ஊர் பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கடலூர் விருத்தாச்சலம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணையில் பெண்ணை ஸ்ரீதர் ஒரு தலையாக காதலித்தாகவும், திருமண செய்தியை அறிந்து பெண்ணின் வாழ்க்கை நாசமாக்க கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீதரை கைது செய்து தலைமறைவான அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.