நடுரோட்டில் உடல் முழுவதும் தீப்பற்றி.. காப்பாற்றுங்கள் என கதறிய இளம்பெண் : விசாரணையில் சிக்கிய காதலன்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 9:02 pm

உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் சாலையில் காப்பாற்றுங்கள் என கதறிய இளம்பெண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் பனைப்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவர் உடலில் உடைகள் இல்லாமல் உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில் காப்பாற்றுங்கள் என அலறி கொண்டே காட்டு பகுதியிலிருந்து ஓடி வந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.‌

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண் தானாக தற்கொலை செய்ய முயற்சித்து தீ வைத்து கொண்டாரா அல்லது கொலை செய்யும் நோக்கில் வேறு யாரேனும் தீ வைத்தார்களா என விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா (வயது 19) என தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் குடியிருந்து வரும் லோகேஷ் என்ற வாலிபரும் பூஜாவும் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததும், கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் இன்று தனியாக காட்டு பகுதிக்கு சென்றதாகவும், அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமண செய்ய சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் கொண்ட லோகேஷ் பூஜாவை கல்லால் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த பூஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் லோகேஷை தேடி வந்த நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் மயக்கம் வருவதாக கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி செளமியா மற்றும் போலீசார் லோகேஷிடம் இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக லோகேஷை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த பெண்ணை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலனே காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 700

    0

    0