ரயில்வே ட்ராக் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் : திடிரென ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 10:21 pm

கோவை : தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் வசிப்பவர் ஜெபமாலை ராஜ். இவர் கூலிக்கு விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரசன்னா ஜெபமாலை ராஜ் என்பவர் தற்போது தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சோமனூர் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே நின்றுகொண்டு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தனது தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்துள்ளார். இது அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த ரயில் முன்பாக திடீரென பிரசன்னா ஜெபமாலை ராஜ் நின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் அவரது உடல் இரு துண்டுகளாக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தற்போது போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Ajith kumar Good Bad Ugly Remake of Korean Hit Movie கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?